×

மிலாதுநபியை முன்னிட்டு சென்னையில் வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு

சென்னை: மிலாதுநபியை முன்னிட்டு சென்னையில் வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மிலாதுநபி தினத்தையொட்டி வரும் 17ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

The post மிலாதுநபியை முன்னிட்டு சென்னையில் வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Miladhunabi ,Chennai ,Collector ,Rashmi Siddharth Jagade ,Miladunabi Day ,Tasmac ,for Tasmak ,
× RELATED மணிமங்கலத்தில் செயல்பட்டு வரும்...