×

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதாரை பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பான கேள்விக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இறப்பு எண்ணிக்கையை சரிசெய்த பிறகு உயிரோடு இருப்பவர்களில் ஆதார் எண் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 130.2 கோடி. இது 2022 ம் ஆண்டிற்கான மொத்த மக்கள்தொகையில் 94 சதவீதத்திற்கும் அதிகமாகும். பிறப்பு, இறப்பு சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட பதிவாளர்களிடம் இருந்து இறந்தவர்களின் ஆதார் எண்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government of the Population ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில்...