நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ‘‘பாஜ கூட்டணியில் இருந்தபோது, கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து பல்வேறு சுமைகளை சுமந்தோம். இப்போது தான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறோம். இனி பாஜ உடன் எப்போதும் கூட்டணி கிடையாது. பாஜ யாருடைய தோளிலும் ஏறி சவாரி செய்யும் நிலை இப்போது இல்லை. அண்ணாமலையை நம்பி ஒரு தேசிய கட்சி செல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது’’ என்று பேசினார்.
The post இனி பாஜ உடன் கூட்டணி கிடையாது இப்பத்தான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறோம்: நத்தம் விஸ்வநாதன் நிம்மதி appeared first on Dinakaran.