×

கூட்டணி இல்லை என விஜய் சொன்னது எடப்பாடி பழனிசாமிக்கு அவமானமாகிவிட்டது: ராஜ்யசபா சீட்டுக்குத்தான் அதிமுகவுடன் தேமுதிக இருக்கிறது; புகழேந்தி காட்டம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுகவுடன் எந்த கூட்டணியும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கூறிவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் 2 அல்லது 3 சீட் கிடைக்குமா என எதிர்பார்த்து ம‌ற்ற கட்சிகள் எங்களுடன் பேச வருவார்கள். தற்போது விஜய் ஏதாவது கூட்டணிக்கு வருவாரா, திருமாவளவன் பிரிந்து விடுவாரா என்று எதிர்பார்க்கும் நிலைமைதான் அதிமுகவுக்கு இருக்கிறது. 40% ஓட்டில் இருந்து 20 சதவீதத்திற்கு அதிமுக போய்விட்டது விஜய் எங்கள் பக்கம் வருவார் என அதிமுக எதிர்பார்த்ததே தவறு. அம்மாவை பற்றி ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்த சீமானையும் இவர்கள் கண்டுகொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெயக்குமாருக்கும் விஜய் சொன்ன பதில் அவமானமாகி போய்விட்டது.

நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என சொல்ல அதிமுகவிற்கு தைரியமில்லை. அதிமுகவில் யாரும் சீட்டும் கேட்க மாட்டார்கள். தேமுதிக ராஜ்யசபா சீட்டுக்குத்தான் அதிமுகவுடன் இருக்கிறது. இல்லையென்றால் அவர்களும் டாட்டா காட்டி சென்று விடுவார்கள். எல்லாரும் பாஜவுக்கு வால் பிடித்துக் கொண்டு கூஜா தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள். கட்சியின் மீது அக்கறை இல்லை. பாஜவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை தங்கமணி, வேலுமணி சொல்ல மறுக்கிறார்கள். இவர்களை எல்லாம் வைத்துக் கொண்டுதான் அண்ணாமலை பாஜ ஆட்சிக்கு வரும் என்று சொல்கிறார். ஈடி ரெய்டு வந்தால் அமைதியாக இருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு என்றால் கூட்டத்தைக் காட்டுகிறார்கள். பிரியாணியை இறக்கி ஆட்களை சப்ளை செய்கிறார்கள். மத்திய அரசு என்றால் பயப்படுகிறார்கள். 2026ல் பாஜ ஆட்சி வரும் என அண்ணாமலை கூறுவது அதிமுக உடன் இருக்கும் தைரியத்தில்தான் என்றார் புகழேந்தி.

The post கூட்டணி இல்லை என விஜய் சொன்னது எடப்பாடி பழனிசாமிக்கு அவமானமாகிவிட்டது: ராஜ்யசபா சீட்டுக்குத்தான் அதிமுகவுடன் தேமுதிக இருக்கிறது; புகழேந்தி காட்டம் appeared first on Dinakaran.

Tags : VIJAY ,EDAPPADI PALANISAMI ,RAJYASABHA ,Chennai ,Tamil Nadu Victory Club ,Supreme Leader ,MGR ,Jayalalitha ,Edapadi Palanisami ,Rajya Sabha ,Supreme ,Praguzhenthi kadam ,
× RELATED மகிழ்ச்சி பொங்கிட, உவகைப் பெருக்குடன்...