- அண்ணாமலை
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- வில்லிவாக்கம்
- சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம்
- பி.கே.சேகர்பாபு
- தின மலர்
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் வில்லிவாக்கத்தில், ரூ.53 கோடி மதிப்பீட்டில் அலங்கார மீன் வர்த்தக மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை மண்டல காலம் முடிந்து அடுத்து மகர விளக்கு பூஜை காலம் தொடங்க இருக்கிறது. ஒரு சிலர் விரத காலங்களில் மாலை அணிந்து கொண்டு இருப்பவர்கள் காலிலே செருப்பு போடாமல் இருப்பார்கள். நான் கூட மலை ஏறும்போது காலில் செருப்பு அணிய மாட்டேன். இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, நிச்சயமாக கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜ வெற்றி பெறும். திமுக 40 தொகுதிகளிலும் டெபாசிட் வாங்காது எழுதி வைத்துக் கொள்ளுங்கள், என அண்ணாமலை கூறினார். ஆனால், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. எனவே, தேர்தல் தோல்விக்கு அவர் இதுவரை பரிகாரம் தேடவில்லை. அதற்கு பிராயச்சித்தமாக இந்த சவுக்கடிக்கு செல்கிறார் என நினைக்கிறேன். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் புகார் பெற்ற 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்திருக்கிறோம்.
நடந்த சம்பவத்திற்கு நிச்சயமாக எல்லோரும் வருத்தப்படுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடக்க கூடாது என்று முதல்வர் தீவிரமாக உத்தரவிட்டு, காவல்துறையை முடுக்கிவிட்டு இருக்கிறார். அதன்படி, குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி இருக்கிறோம். நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. ஆனால் அதற்குண்டான நடவடிக்கைகள் இந்த அரசு உடனடியாக எடுத்திருக்கிறது. மனசாட்சி உள்ளவர்கள், நடுநிலையாளர்கள் இதை பாராட்டியுள்ளனர். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நன்றாக இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு எப்படி சுதந்திரமாக நடமாட முடியும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
The post தேர்தல் தோல்விக்கு பரிகாரமாக சவுக்கடியை ஏற்கிறார் அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.