×

அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த சம்பவம் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை: கனிமொழி எம்பி கோரிக்கை

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாக பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாக கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதை பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த சம்பவம் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை: கனிமொழி எம்பி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Deputy Secretary General ,Kanimozhi MB ,Dimuka ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...