உதகை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 26-ம் தேதி சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. தேர்தல் அலுவலர் அளித்த புகாரில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.