×

ஓட்டப்பிடாரத்தில் சூரிய ஒளி உயர் கோபுர மின்விளக்கு சேவை துவக்கம்

ஓட்டப்பிடாரம், நவ. 9:   ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து  நிர்வாகம் சார்பில் புதிதாக ரூ, 26 லட்சம் மதிப்பிலான சூரிய ஒளி உயர் மின் கோபுர விளக்குகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலமடம், முப்புலிவெட்டி, கீழ்பகுதி,  மேல்பகுதி, தெற்கு பரும்பூர் ஆகிய 4 இடங்களில் தலா ரூ,6.50 லட்சம் மதிப்பீட்டில்  மொத்தம் ரூ. 26 லட்சம் மதிப்பிலான உயர் கோபுர சோலர் மின் விளக்குகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இயக்கிவைக்கப்பட்டது.

துவக்க நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவரும் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான இளையராஜா, துணைத்தலைவர் ஹரிஹரன், வார்டு உறுப்பினர்கள், குலசேகரநல்லூர், புதியம்புத்தூர், ராஜாவின்கோயில், ஜம்புலிங்கபுரம் பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Launch ,runway ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!