அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருட்கள் பறிமுதல்

வானூர், நவ. 4:  வானூர் தாலுகா திருவக்கரையில் ஜல்லி உடைக்கும் குவாரிகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. கற்களை உடைப்பதற்காக வெடிபொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வெடிபொருட்கள் அரசின் அனுமதியுடன்தான் வைத்திருக்க வேண்டும். ஒருசில நேரங்களில் வெடிபொருட்கள் வைத்திருக்க அனுமதி அளித்த காலத்தை விடவும் அதிக காலம் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததின்பேரில் வானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் நேற்று திருவக்கரை கிராமத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள திருமுருகன் குவாரியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசு அனுமதியின்றி வைத்திருந்த 400 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை திண்டிவனம் வெடிபொருட்கள் சேமிப்பு கிடங்கில் வைக்க எடுத்து சென்றனர்.

Related Stories:

>