×

உப்பூர் ஓடையில் மீன்கள் இல்லாததால் பறவைகள் வருகை குறைவு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஆர்எஸ். மங்கலம், நவ. 3: உப்பூர் ஓடையில் வறட்சியால் மீன்கள் இல்லாததால் பறவைகள் வருகை குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆர்எஸ். மங்கலம் கிழக்கு கடற்கரை சாலை உப்பூர் அருகிலுள்ள ஓடை வழியாக உபரிநீர் சென்று கடலில் கலக்கிறது. இந்த ஓடையில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இதனை உண்பதற்காக இந்த ஓடையில் நீர்காகம், செங்கால், நாரை, கொக்கு, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு பறவையினங்கள் முகாமிடும். மேலும் அருகில் இறால் பண்ணைகளும் உள்ளதால் அவற்றை உண்பதற்காகவும் ஏராளமான பறவைகள் இங்கு முகாமிட்டு வந்தன. இந்நிலையில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக இந்த ஓடையில் மிகக்குறைந்தளவு தண்ணீரே உள்ளதால் மீன்களின் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை. இதனால் பறவைகளின் வருகை குறைந்து உப்பூர் ஓடை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள், பறவை ஆர்வலர்கள் ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags : stream ,bird visits ,
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்