×

கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு நீடாமங்கலம் அருகே சித்தமல்லியில் வீரனார் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.7ஆயிரம் கொள்ளை

நீடாமங்கலம்.நவ.1: நீடாமங்கலம் அருகே சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் உள்ள வீரனார் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி கீழத்தெருவில் வயல் பகுதியில் ஆதிகாலத்திலிருந்து அப்பகுதி மக்கள் வணங்கி வரும் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை தற்போது கீழத்தெரு கிராமவாசிகள் சீரமைத்து ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வருவது வழக்கம்.இந்நிலையில் கொரோனா காலம் என்பதால் கடந்த ஆண்டு வீரனார் கோயிலில் திருவிழா நடக்கவில்லை. இக்கோயிலில் வேண்டுதலின் பேரில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 29 ம்தேதி இரவு மர்ம நபர்கள் கோயில் கிரில் கேட்டில் உள்ள பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கிராம நிர்வாகிகள் நீடாமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Surveillance officers ,temple ,Chittamalli ,Needamangalam ,
× RELATED மதுரை கோயில் அருகே கட்டடம்: அறிக்கை தர ஆணை