×

ஆயத்த ஆடை ஏற்றுமதி 13.5% அதிகரிப்பு

திருப்பூர், அக்.18:ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த மாதம் 13.5 சதவீதம் அதிகரித்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கான புள்ளி விவர அட்டவணையை, வணிக புலனாய்வு மற்றும் புள்ளி விவரங்கள் துறை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை, ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்து வந்தது.
ஏற்றுமதியாளர்களின் கடின முயற்சி மற்றும் அரசின் ஆதரவால், தற்போது ஏற்றுமதி வர்த்தகம் உயர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக கடந்த செப்டம்பர் மாதம் வளர்ச்சியடைந்துள்ளது. டாலர் மதிப்பில் கணக்கிடும் போது 10.22 சதவீதமும், ரூபாய் மதிப்பில் கணக்கிடும் போது 13.5 சதவீதமும் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நெருக்கடி நிலையில் இருந்து ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர காரணமாக இருந்த, மத்திய ஜவுளி வர்த்தகம் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், வளர்ச்சியடைய ஏற்றுமதியாளர்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்த வளர்ச்சியால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்