×

குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்படுத்தும் ‘ஸ்மோக் பிஸ்கட்’ பறிமுதல்: பரபரப்பு

 

அவிநாசி, ஏப்.24: சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி அவிநாசியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் ‘ஸ்மோக் பிஸ்கட்’களை பறிமுதல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கடையில் குழந்தைகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய ‘ஸ்மோக் பிஸ்கட்’ எனப்படும் உணவுப் பொருள் விற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஸ்டாலின்பிரபு நேரில் திடீர் ஆய்வு செய்தார். அதன் பின்னர், ‘ஸ்மோக் பிஸ்கட்’ மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட நைட்ரஜன் வாயு அடைத்த பிளாஸ்டிக் கேன்களை (சிலிண்டர்கள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் இது குறித்து விற்பனையாளருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில், கர்நாடக மாநிலம், தாவண்கரே பகுதியில் சிறுவன் ஒருவன் இந்த வகையான ஸ்மோக் (ஐஸ்) பிஸ்கட்டை சாப்பிட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

The post குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்படுத்தும் ‘ஸ்மோக் பிஸ்கட்’ பறிமுதல்: பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Chitrai ,Tirupur District ,Avinashilingeswarar Temple ,Chitrai Therthiruvizha ,
× RELATED கட்டுமான அலுவலக பூட்டை உடைத்து திருடிய நபர் கைது