×

திருப்பூர் மாநகரில் தேர்தல் விதி மீறியதாக 60 வழக்குகள் பதிவு

 

திருப்பூர், ஏப்.26: நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் பேசுவது. உரிய அனுமதி இல்லாமல் சுவர்களில் சின்னம் வரைவது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரசாரம் செய்வது, பொதுமக்கள் பாதிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக திருப்பூர் மாநகரில், அரசியல் கட்சிகள் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், திருப்பூர் மாநகரில், தேர்தல் விதிமுறைகள் மீறியதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் மீது மொத்தம் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்பூர் மாநகரில் தேர்தல் விதி மீறியதாக 60 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...