×

சேலம் மாவட்டத்தில் அனைத்து குறைதீர் கூட்டமும் ரத்து

சேலம், மார்ச் 19: சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறை தீர்க்கும் கூட்டங்களும் வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Tags : Salem ,
× RELATED கூடுதல் பேருந்துகள், ரயில்களை இயக்குக...