×

கட்டிமேடு ஊராட்சி நாகலடி குளத்தில் வெங்காய தாமரை அகற்றும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சி எல்லை நாகலடி அருகே ஊராட்சிக்கு சொந்தமான குளத்தில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடி செடிகள் மற்றும் அதன் சுற்றுபுறக் கரைகளில் முட்புதர்களும் கருவேலி மரங்களும் கஜாபுயலில் குளத்தில் விழுந்து கிடந்த மரங்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் கூறிய ஆலோசனை படியும், மாவட்ட கலெக்டர் கூட்டத்தில் நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க கொடுத்த அறிவுரைகளின் படியும் வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணிகள் நடக்கிறது. பின்னர் எல்லை நாகலடியில படித்த இளைஞர்கள் உதவுயுடனும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டும் அதன் கரைகளில் ஊராட்சி ஒன்றியம் மூலம் கீழப்பனையூரில் இருந்து 300 மரக்கன்றுகள், விவசாயத் துறையில் தென்னங்கன்றுகள் பெற பட்டு குளத்தின் சுற்றிலும் மன்னடித் தெரு சாலை ஓரங்களிலும் நடப்ட்டது.

இது குறித்து கட்டிமேடு ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் கூறுகையில், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர்வரும் ஜூன் மாதம் கட்டிமேடு ஊராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர் ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகள் ஒன்று வீதம் வழங்கப்பட உள்ளது. பசுமையான கிராமமாக மாற்ற ஊராட்சி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags : Nirmaladi pond ,
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...