×

2.37 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை: முதல்வர், அரசு பாராட்டு

திருவாரூர், மே 9: திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் நிலையில் இவர்கள் அனைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினத்துடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள நிலையில் தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல மகத்தான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.அதன்படி, ஒன்று முதல் 5 வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையிலும் பள்ளிக்கு தினந்தோறும் தவறாமல் வருகை தரும் வகையிலும் கூலி தொழிலாளர்களின் ஏழை, எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் துவங்கப்பட்ட காலை உணவு திட்டமானது 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில் இந்த மகத்தான திட்டமானது தெலுங்கானா போன்ற பிற மாநிலங்கள் மட்டுமின்றி கனடா போன்ற நாட்டிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி பெண்களின் உயர்கல்விக்கான புதுமைபெண் திட்டம், ஏழை, எளிய மற்றும் குடும்ப பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பேருந்து சேவை உட்பட பல்வேறு மகத்தான திட்டங்கள் மட்டுமின்றி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ ஆயிரம் வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினையும் முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான கடந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்துள்ள நிலையில் இதன்மூலம் மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் பயனடைந்து வருவதை போன்று திருவாரூர் மாவட்டத்திலும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 287 குடும்ப தலைவிகள் பயனடைந்து வருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசுக்கும் பயனாளிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post 2.37 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை: முதல்வர், அரசு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Chief Minister ,M.K.Stalin ,Government ,Tamil Nadu ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...