×

திருவாரூர் அருகே போலீசார் அதிரடி

திருவாரூர், மே 8: திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கள்ளசாராய விற்பனை மற்றும் அதனை பயன்படுத்துதல் குறித்து பொது மக்கள் எஸ்.பி அலுவலகத்திற்கு 9498100865 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவித்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் தகவல் தெரிவிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரடாச்சேரி பகுதியில் இரவு நேரங்களில் அங்குள்ள ஆறுகளிலிருந்து இருசக்கர வாகனம் மூலம் சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கூத்தாநல்லூர் அகரபொதக்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் முரளிதாஸ் (42), செல்வமணி மகன் சரண்ராஜ் (32), செல்வம் மகன் செங்குட்டுவன் (42), காமராஜ் மகன் தினேஷ்குமார் (32), கலியபெருமாள் மகன் தினேஷ்குமார் (36) மற்றும் வாழாச்சேரி பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் அழகேசன் (39) ஆகிய 6 பேரும் மணல் திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் 6 பேரும் கூட்டாக சேர்ந்து கூத்தாநல்லூர், அத்திக்கடை மற்றும் பொதக்குடி உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்காக சிமெண்ட் சாக்கு மூலம் மணலை திருடி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 பைக்குகளையும் பறிமுதல் செய்ததுடன் திருடி விற்பனை செய்யப்பட்ட மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடித்த பயிற்சி டி.எஸ்.பி காயத்ரி மற்றும் கொரடாச்சேரி சப் இன்ஸ்பெக்டர் வைரமணி மற்றும் போலீசாரை எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டியுள்ள நிலையில் இதேபோன்று மாவட்டத்தில் மணல் மற்றும் சவுடு மண் கடத்தலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் அருகே போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,SP Jayakumar ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...