×

மதுபாட்டில் விற்ற 2 ேபர் மீது வழக்கு

திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 18: திருவெண்ணெய்நல்லூர் அருகே வீரணாம்பட்டு, தொட்டிமேடு கிராமங்களில் மதுபாட்டில் விற்பதாக திருவெண்ணெய் நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் தனித்தனி இடத்தில் மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த வேங்கைமலை (60), தொட்டிமேடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அருள் (40) என்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் இருவரும் தப்பியோடிவிட்டனர். அவர்கள் 2 பேரின் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தலா 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : 2ber ,brewing ,
× RELATED அதிக பனிப்பொழிவால் தைலம் காய்ச்சும் தொழில் பாதிப்பு