×

உளுந்தூர்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் இடிந்து விழும் அபாயம்

உளுந்தூர்பேட்டை,  மார்ச் 18: உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார  வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில்  வேலை செய்து வரும் வேளாண்மைதுறை அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை வட்டாரத்திற்கு  உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான  விவசாய உபகரணங்கள் வழங்குதல், அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக  விவசாயிகளுக்கு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அலுவலர்கள் பணி புரிந்து வரும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கடந்த 30  ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. இதனால் எப்போது விழும் என்ற  அச்சத்துடன் வேளாண்மை அலுவலர்கள் தினந்தோறும் பணிபுரிந்து  வருகின்றனர். பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்னர்  உளுந்தூர்பேட்டை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு புதிய கட்டிடம்  கட்டிதர மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : building ,Ulundurpettai Regional Agricultural Extension Center ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...