×

திருவண்ணாமலையில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் சிஇஓ தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை, மார்ச் 13: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று, மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை சிஇஓ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், 2 நாட்கள் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ராேஜந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் வாழ்த்தி பேசினார். முடிவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.நான்சி நன்றி கூறினார்.

இதில் திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், கடலூர், திருப்பத்தூர், திண்டிவனம் ஆகிய 9 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 630 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.முதல் நாளான நேற்று 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்போட்டிகள் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று(வெள்ளி) உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு இன்று பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இப்போட்டியில் 360 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் வரும் மே மாதம் திருவண்ணாமலையில் நடைெபறும் இருப்பிட பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : CEO ,Regional Games Competitions ,Thiruvannamalai ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...