×

மேல்மலையனூர் அருகே விபத்தில் மெக்கானிக் சாவு

மேல்மலையனூர், மார்ச் 12: மேல்மலையனூர் அருகே நடந்த விபத்தில் மெக்கானிக் பலியானார். மேல்மலையனூர்  தாலுகா கொடம்பாடி தெற்குமேட்டு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வீரமணி  (25). நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில்  நின்றிருந்த டிராக்டர் டிப்பர் பின்னால் ரிப்ளைக்டர் இல்லாததால் டிப்பரின்  மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே வீரமணி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவலூர்பேட்டை போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : Mechanic death ,Malmalayanur ,
× RELATED காரைக்குடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை!