×

கிருஷ்ணகிரியில் 18ம் தேதி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

கிருஷ்ணகிரி, மார்ச் 12: கிருஷ்ணகிரியில் வரும் 18ம் தேதி மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆண்களுக்கான ஹாக்கி தொடர் போட்டிகள் வரும் 18ம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் அனைத்து வயது பிரிவை சார்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ளலாம். போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ₹1600ம், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ₹800 ரொக்க பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள், தங்கள் அணி வீரர்களின் பெயர் பட்டியலை, வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : District level hockey tournament ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம்...