×

திருக்காளாத்தீஸ்வரர் கோவில் திருவிழா பஞ்ச மூர்த்தி ஊர்வலம் கோலாகலம்

உத்தமபாளையம், மார்ச் 12: உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் தேரோட்ட விழாவின் நிறைவாக பஞ்சமூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் மாசி மகத்திருவிழா கடந்த 26ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு சமுதாய மக்களின் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது. மண்டகப்படியின் போது தினந்தோறும் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு  நான்கு ரத வீதிகளின் வழியே வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. கோவிலில் இருந்து விநாயகர், வள்ளிதேவசேனா சமேதசண்முகர், சோமஸ்கந்தர், ஞானாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  மேளதாளம் முழங்க நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் கோவில் வளாகத்தில் கொடிஇறக்கப்பட்டது.  பஞ்சமூர்த்தி ஊர்வல நிகழ்ச்சிகளை திருக்காளாத்தீஸ்வரர் சேவைஅறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.

Tags : Thirukkalatheeswarar Temple Festival Pancha Murthy ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு