×

சிறுபாலம் சீரமைக்க மெகா பள்ளம் தோண்டியதால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி

உளுந்தூர்பேட்டை, மார்ச் 11: உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் சிறுபாலங்களை சீரமைக்க மெகா பள்ளம் தோண்டியதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கியது. இந்த பணிகளின் முக்கிய பணியான அனைத்து தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு பைப் லைன்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்தது. இந்த பணிகள் முடிவடைந்து தற்போது தெருக்களில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியில் தனியார் பள்ளிக்கு செல்லும் முக்கிய சாலையில் இருந்த இரண்டு சிறு பாலங்கள் உடைந்து உள்வாங்கியதால் இதனை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு சிறுபாலங்களையும் சீரமைக்க ஒரே நேரத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இதனால் இந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தற்போது அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு சிறுபாலங்களையும் ஒரே நேரத்தில் சீரமைக்காமல் ஒவ்வொன்றாக சீரமைக்கும் பணியை துவங்கி இருந்தால் மாணவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதை தடுத்து இருக்கலாம் என பெற்றோர்கள் தெரிவித்தனர். மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த சிறுபாலங்கள் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணியை துவக்க  அதிகாரிகளுக்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : School students ,state ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு