×

பாஜக ஆட்சியில் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது

விழுப்புரம், மார்ச் 10: பாஜக ஆட்சியில் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று முதல்வர் நாராயணசாமி கூறினார், குடியுரிமை திருத்த சட்டத்தையும், என்சிஆர், என்பிஆர் நடைமுறைகளையும் திரும்ப பெற வலியுறுத்தி நேற்று இரவு விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நகராட்சி திடலில் நடந்தது.கூட்டத்தில் சிபிஐ அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, எஸ்டிபி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்,  தா.பாண்டியன்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் எம்பி, மாவட்ட செயலாளர் ஏவி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:குடியுரிமை சட்டத்தை இந்திய அளவில் 24 கட்சிகள் எதிர்த்தது. இந்த சட்டத்தை படிப்படியாக நிறைவேற்றும் விதமாக ராமர் கோயில் கட்டி வருகிறார்கள். மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது ஒரு மதத்தைமட்டும் பாதிக்காது. சிறுபான்மை மக்களை பாதிக்கும் சட்டமாகும். எனவேதான் புதுச்சேரியில் இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறோம். மசூதியை சேதப்படுத்த முயன்றவர்களை கைது செய்தோம். எனவேதான் அங்கு மதக்கலவரம் இல்லை. முஸ்லிம் ஒருவர் தான் முருகர் கோயில் கட்டியுள்ளார். பாஜக ஆட்சியில் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது.  புதுச்சேரியில் நியமனம் செய்யப்பட்ட 3 பாஜக எம்எல்ஏக்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று துணை நிலை ஆளுனர் கிரண்பேடிக்கு மனு கொடுக்கிறார்கள். மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க உரிமையில்லை என்று கிரண்பேடி சொன்னார். ஆனாலும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினோம். இந்தியாவில் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதை மக்கள் பேசக்கூடாது என்பதற்காக இந்த சட்டத்தை கொண்டுவந்து மக்களை திசை திருப்பியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டெல்லியில் இருக்கும்போது கலவரம் ஏற்பட்டது. இது நாட்டுக்கு அவமானம் இல்லையா. இன்னொரு சுதந்திர போராட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்றார்.

Tags : Independence ,BJP ,
× RELATED வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை...