×

கார் டிரைவர்கள் தாக்கிய சம்பவம் எஸ்டேட் தொழிலாளர்கள் எஸ்பி.யிடம் புகார் மனு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தேனி, மார்ச் 10: கொழுக்கு மலை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களை சூரியநெல்லி கார் டிரைவர்கள் தாக்கியது சம்பந்தமாக நடவடிக்கை கோரி எஸ்டேட் தொழிலாளர்கள் தேனி எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியில் கொழுக்கு மலை உள்ளது. இங்குள்ள எஸ்டேட் மத்தியில் ரிசார்ட் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை சில கார் ஓட்டுனர்கள் சிங்கப்பாறை வரை அழைத்து வந்து சுற்றி காண்பித்துவிட்டுச் செல்கின்றனர். இந்த சிங்கப்பாறைக்கு செல்லும் பகுதி ஆபத்தானதாக இருந்தாலும் கார் ஓட்டுனர்கள் பணம் பார்க்கும் வகையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இந்நிலையில் கொழுக்கு மலை தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் பணியாளர்கள் சிங்கப்பாறை வரை சுற்றுலா பயணிகளை கூட்டி வரும் வாகன ஓட்டுனர்களிடம் ஆபத்தான பகுதிக்கு ஏன் கூட்டி வருகிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளனர். இதற்கு பணியாளர்களை கார் டிரைவர்கள் அடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேயிலை எஸ்டேட் நிர்வாகத்தினர் குரங்கனி போலிசில் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். இருந்தபோதிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாகவும், சூரியநெல்லியை சேர்ந்த கார்டிரைவர்கள் தேயிலை எஸ்டேட் நிர்வாக பணியாளர்களை தாக்கியுள்ளனர்.

எனவே, கொழுக்கு மலை டீ எஸ்டேட் பணியாளர்கள் செல்வக்குமார், பிரதாப் ஆகியோர் தலைமையில் தேனியில் உள்ள மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகம் நேற்று வந்தனர். எஸ்.பி சாய்சரன்தேஜஸ்வியிடம் புகார் மனு அளித்தனர்.
இம்மனுவில், பாதுகாப்பற்ற தமிழக எல்லைப்பகுதிக்குள் சூரியநெல்லியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த கார்டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Estate workers ,car drivers ,SP ,incident ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்