×

கொங்கணாபுரத்தில் ஆடு விற்பனை களை கட்டியது

இடைப்பாடி, மார்ச் 10: இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,200 ஆடுகள், 900 பந்தய சேவல்கள்,  2,000 சேவல்கள், 105 டன் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். இதில் 10 கிலோ எடையுள்ள ஆடு ₹5,800 முதல் ₹6,200க்கும்,  20 கிலோ எடையுள்ள ஆடு ₹11,500 முதல் ₹12,500க்கும் விற்பனையானது. வளர்ப்பு குட்டி ஆடு ₹1,600 முதல் ₹2,000க்கும் விலைபோனது.   பந்தய சேவல்களை மோதவிட்டு அதன்திறன் பொருத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சேவல் கோழிகள் ₹100 முதல் ₹1000க்கு விற்பனையானது.

28 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ₹120 முதல் ₹200 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ₹15 முதல் ₹25 வரையிலும், சின்னவெங்காயம் ₹30 முதல் ₹35 வரையிலும், பீட்ருட் ₹25க்கும், பீன்ஸ் ₹25 முதல் ₹35க்கும், உருளைக்கிழங்கு ₹20 முதல் ₹28க்கும், முள்ளங்கி ₹10 முதல் ₹15 வரையிலும், முட்டைக்கோஸ் ₹15 முதல் ₹20 வரையிலும், மிளகாய் ₹25க்கும், இஞ்சி ₹6080க்கும் விற்பனையானது. தற்போது, வெயில் காலம் தொடங்கியுள்ளதால் சந்தையில் இந்த வாரம் மண்பானை விற்பனை அமோகமாக இருந்தது. பானை அதன் அளவு பொருத்து ₹50 முதல் ₹200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கூடிய சந்தையின் மொத்த வர்த்தகம் ₹4 கோடியை தாண்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா