×

நெல் அறுவடைக்கு பிறகு காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி சாகுபடி செய்தால் அதிக லாபம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விரிவாக்க கல்வி இயக்குனர் தகவல்

நீடாமங்கலம், மார்ச் 10: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 9 வது அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விரிவாக்கக் கல்வி இயக்குனர் ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில்,காவிரி டெல்டா மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு பிறகு தை மற்றும் மாசிப் பட்டங்களில் காய்கறி பயிர்கள், வெள்ளரி மற்றும் தர்பூசணி சாகுபடி செய்யும் போது தண்ணீரின் தேவையும் குறைவு, வருவாயும் அதிகம் என்று மேலும் ஒருங்கிணைந்த பண்ணயம் வாயிலாக அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றார். நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி முதன்மை பேராசிரியர் ராஜேந்திரன், ஐதராபாத் வேளாண்மை தொழில் நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திருச்சி சரக காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நெல் உயர் விளைச்சல் சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற புத்தகத்தினையும் 7 கையேடுகளையும் வெளியிட்டு பேசினார்.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமஜெயம், நபார்டு வளர்ச்சி வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாட்ரிக்ஜாஸ்பர், கால்நடை பல்கலைக் கழக உழவர் பயிர்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் கதிர்செல்வன், ஆடுதுறை தமிழ்நாடு நெல் அராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சுரேஷ், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் எழிலரசன் கலந்து கொண்டு பேசினர். வேளாண்மை துறை, தோட்டக் கலைத்துறை, மீன்வளத்துறை, பட்டுவளர்ச்சிதுறை, வனத்துறை ஆகியத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் தங்கள் துறைகளின் பங்களிப்பு மற்றும் மற்ற துறைகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தினால் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பற்றி பேசப்பட்டது. மேலும் அறிவியல் ஆலோசனைக் குழுவின் விவசாய பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், தொழில் முனைவோர் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் வரும் ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பற்றிய கருத்துகளை கூறினர்.மேலும் நெல், சிறுதானியங்கள் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றால் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளின் கண்காட்சியும் இடம் பெற்றது. மண்ணியியல் துறை உதவி பேராசிரியர் அனுராதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் ராஜாரமேஷ், சரவணன், பயிற்சி உதவியாளர்கள், திட்ட உதவியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : paddy harvest ,
× RELATED மீஞ்சூர் அருகே இயற்கை முறையில்...