×

காதல் விவகாரத்தில் அண்ணன், தம்பிக்கு இரும்புக் கம்பி அடி

கம்பம், மார்ச் 6: கம்பத்தில் காதல் விவகாரத்தில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞரை தெற்கு போலீஸார் கைது செய்தனர். கம்பம் குமுளி சாலை பால்பாண்டியர் பண்ணையில் வேலைபார்ப்பவர் முருகன். இவரது மகன் செல்வக்குமார் (20), அண்ணன் அழகுபூமி (22). இவர்களும் கம்பம் தினகரன் நகரைச் சேர்ந்த முருகன் மகன் விஜய், கக்கன் காலனியைச் சேர்ந்த சாமுவேல் மகன் இமானுவேல், ராஜேந்திரன் மகன் தினேஷ் ஆகியோர் கேரளாவுக்கு கூலி வேலைக்கு செல்பவர்கள், நண்பர்களாக உள்ளனர்.

அழகுபூமி நந்தனார் காலனியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகள் பவுசியாவை காதலித்ததாகக்கூறப்படுகிறது. இது விஜய் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. காதல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என விஜய் அழைக்கவே, செல்வக்குமார் அவரது அண்ணன் அழகுபூமி ஆகியோர் ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கு அருகே வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, விஜய், இமானுவேல், தினேஷ் ஆகியோர் செல்வக்குமார், பூமிராஜாவை இரும்புக் கம்பியால் தாக்கினர். காயம்பட்ட இருவரும் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்து, மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல்:...