×

அனுமதியின்றி இரவு நேரத்தில் மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை

உளுந்தூர்பேட்டை, மார்ச் 6: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உ.கீரனூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிகளவு கருவேல மரங்கள் உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் அதிக ஆழம் போட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் மண் அள்ளப்படுவதாகவும், இவ்விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உ.கீரனூர் பெரிய ஏரியில் அதிகளவு ஆழம் போட்டு மண் எடுப்பதால் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்படுகிறது என்றும், ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் செல்லும் போது கால்நடைகள் மட்டுமின்றி, மனிதர்களும்  இந்த பள்ளத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் நிலை உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை