×

தலைவாசல் அருகே மேம்படுத்தப்பட்ட கால்நடை மருத்துவமனை திறப்பு

ஆத்தூர், மார்ச் 3:  தலைவாசல் அருகே புளியங்குறிச்சியில் மேம்படுத்தப்பட்ட கால்நடை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. தலைவாசல் ஒன்றியம் புளியங்குறிச்சி கிராமத்தில் விவசாய தொழிலுக்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து காக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மருதமுத்து எம்எல்ஏ ஆகியோரிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில், புளியங்குறிச்சி கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட கால்நடை மருத்துவமனை அமைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, புளியங்குறிச்சி கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட கால்நடை மருத்துவமனையின் திறப்பு விழா மருதமுத்து எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, புளியங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடைத்துறை உதவி இயக்குனர் அய்யாசாமி, மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, சிங்காரம், வெங்கடேசன், முருகவேள், கால்நடை மருத்துவர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கால்நடை மருத்துவர் தேசிங்குராஜா நன்றி கூறினார்.

Tags : headquarters ,veterinary clinic ,
× RELATED சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்