×

நிலத்தை மீட்க வலியுறுத்தி ஏப்.2ல் பொங்கல் வைக்கும் போராட்டம்

ஈரோடு, மார்ச் 3: ஈரோட்டில் ஏப்.2ம் தேதி பொங்கல் வைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக பெரியமாரியம்மன் நில மீட்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். ஈரோட்டில் பெரியமாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பூசப்பன், துணைத்தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பெரியமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வலியுறுத்தியும், கோயில் நிலத்தில் ஏப்.2ம் தேதி பொங்கல் வைக்கும் போராட்டத்திற்கும், முனிசிபல் காலனி கல்யாண விநாயகர் கோயிலில் இருந்து பேரணியாக வருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதுகுறித்து தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலுக்கு 12.66 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது எனவும், இதை சிஎஸ்ஐ நிறுவனம் ஆக்கிரமித்து வைத்துள்ளது என்றும் ஈரோடு தனி தாசில்தார் மற்றும் சென்னை நில அளவை ஆணையர் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கை அரசு ஏற்று நடத்த வேண்டும். ஈரோடு எம்எல்ஏக்கள் இந்த பிரச்னையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று சட்ட ரீதியாகவும், கோயில் நிலத்தை மீட்டு அம்மனுக்கு கோயில் எழுப்பிட வேண்டும். கோயில் நிலத்தில் ஏப்.2ம் தேதி பொங்கல் வைக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக போராட்டத்தில் பெண்கள் மஞ்சள் நிற சேலையிலும், ஆண்கள் மஞ்சள் நிற உடையிலும் பங்கேற்க உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : protest ,land ,restoration ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...