×

(தி.மலை) தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

கீழ்பென்னாத்தூர், மார்ச் 3: கீழ்பென்னாத்தூர், செய்யாறு அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ.நம்மியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த தேசிய அறிவியல் தினத்திற்கு ஊராட்சி தலைவர் கா.சத்யாகார்த்திகேயன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் வே.ராமுலு கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். ஊராட்சி துணைத்தலைவர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சா.செல்வராஜ் வரவேற்றார்.

விழாவினை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சு.விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரிய பயிற்றுநர்கள் ஜெயப்பிரகாஷ், ஆசைத்தம்பி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் சு.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பட்டதாரி உதவி ஆசிரியர் ஏ.மோகன்ராஜ் நன்றி கூறினார்.

செய்யாறு: செய்யாறு அடுத்த கொருக்காத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் சிவசாமி முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் வனிதா முத்துக்குமார், கவுதம் செய்திருந்தனர்.

Tags : National Science Day Celebration ,
× RELATED ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்