×

கருத்தப்பிள்ளையூரில் அதிமுக பொதுக்கூட்டம்

பாவூர்சத்திரம் மார்ச் 2: நெல்லை புறநகர் மாவட்ட அதிமுகவின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடையம் ஒன்றியம் கருத்தப்பிள்ளையூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்  புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான  கே.ஆர்.பி. பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன்,   இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சேர்மப்பாண்டி, கடையம் ஒன்றியம் செயலாளர் அருள்வேல்ராஜ், ஊராட்சி கழக செயலாளர் மைக்கேல்ராஜ், ஆழ்வார்குறிச்சி பேரூர் கழக செயலாளர் சங்கர், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெயராமன், மற்றும் காளிமுத்து, அந்தோணிசாமி, மதியழகன் உட்பட அதிமுக கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : AIADMK Public Meeting ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது