×

பாளையில் வடமாநில பெண் மர்மச் சாவு வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை

நெல்லை, மார்ச்2: பாளையில்  வடமாநில பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் அவரது வங்கி கணக்கில்  பணம் டெபாசிட் செய்தவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். மேலும் மேற்கு வங்க  மாநிலம், கொல்கத்தாவில் இருக்கும் அவரது கணவரிடமும் விசாரணை நடத்த முடிவு  செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்தவர் மிதுன்.  இவரது மனைவி எபா (23). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி, 2வதாக  மிதுனை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.  இவர்கள்  வேலை தேடி கர்நாடகத்திற்கு சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு  தமிழ்நாட்டிற்கு வந்த இந்த தம்பதி, வேளாங்கண்ணியில் தங்கி வேலை செய்து  வந்தனர்.

இந்நிலையில் மிதுன், குழந்தையை அழைத்துக்கொண்டு கொல்கத்தாவிற்கு  சென்று விட்டார். தனியாக இருந்த எபா ஒரு வாரத்திற்கு முன்பு பாளை கேடிசி  நகரில் சொகுசு பங்களாவுக்கு வாடகைக்கு வசித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த வீட்டில்  தூக்கில் தொங்கிய நிலையில் எபா இறந்து கிடந்தார். வீடு உட்புறமாக பூட்டிக்  கிடந்தது. பக்கத்துவீட்டுப் பெண் மாரியம்மாள் கொடுத்த தகவலின் பேரில்  வீட்டின் பூட்டை உடைத்து எபாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசாரின்  விசாரணையில், பாளை பகுதியில் எபா பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.  மேலும் அவர் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வைத்திருந்ததும், சொகுசு  பங்களாவை கூடுதல் முன்பணம் கொடுத்து வாடகைக்கு அமர்த்தியுள்ளதும் பலத்த  சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அவரது வங்கி கணக்கில் ரூ.30 ஆயிரம் வரை  இருப்பு இருந்தது. போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. மேலும் அவர் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வருவதும் வழக்கம் என கூறப்படுகிறது. அவர் மற்றும் சில பெண்களை வைத்து பாலியல்  தொழிலில் ஈடுபட நினைத்தவர்கள் எபாவுக்கு பண உதவி செய்வதாக வாக்குறுதி  அளித்து விட்டு பின்வாங்கினார்களா? அதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டாரா?, அவரது வங்கி கணக்கில் பணம் போட்டவர்கள் யார்?யார்?  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போனில் அடிக்கடி பேசிய நபர்கள் குறித்தும் போலீசார் விவரம் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
எபாவின் கணவர் மிதுனிடம் போன் செய்து விசாரித்த போது,  தான் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.  அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இன்று (2ம் தேதி) உடல் பரிசோதனை அறிக்கையில் எபா எப்படி இறந்தார்? தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Investigation ,Northern Province ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...