×

ஆண்பட்டியில் நெசவாளர்கள் வேலைநிறுத்தம்

தேனி, மார்ச் 1: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், கொப்பையன்பட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். இங்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்கான வர்த்தகம் நடந்து வருகிறது.

இந்நிலையில் நெசவாளர்கள் குறித்து சிலர் தவறான தகவல்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அமலாக்கப்பிரிவுக்கு புகார் அளித்ததாகவும், அந்த புகாரின்பேரில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு நெசவாளர்களுக்கு அபராதம் விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெசவுத் தொழில் குறித்து பொய்யான தகவல் தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆண்டிபட்டி பகுதி நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : men ,strike ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்