×

கம்பம் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடக்கம்

கம்பம், பிப்.27: திருநீற்று புதனை முன்னிட்டு கம்பம் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் நாற்பது நாள் தவக்கால நோன்பை தொடங்கினர்.சாம்பல் புதன் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக்காலத்தின் முதல் நாள் இது. நேற்று கம்பம் ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் விழா நடைபெற்றது. கம்பம் பங்குத்தந்தை இளங்கோ அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில், புனிதப்படுத்தப்பட்ட சாம்பல் மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தில் பூசப்பட்டது.

இதையடுத்து மக்கள் நாற்பது நாள் நோன்பை தொடங்கினர். நிகழ்ச்சியில் புனித ஆரோக்கிய அன்னை அன்பியம், அன்னை தெரசா அன்பிலியம், குழந்தையேசு அன்பியம், புனித செபஸ்தியார் அன்பிலிய இறைமக்கள் ற்றும் கூடலூர், ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப், கருநாக்கமுத்தன்பட்டி கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Lent ,Christians ,Pole Areas ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி