×

அம்பை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் மேலோட்ட ஆய்வு

அம்பை, பிப். 19: அம்பை தாலுகா அலுவலகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர மேலோட்ட ஆய்வு நடந்தது.ஆய்வில் பங்கேற்ற கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் 26 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, வரன்முறை பட்டா, விதவை பென்சன், முதியோர் பென்சன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவற்றிற்கான ஆணைகளை வழங்கினார். முன்னதாக அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டுக்கான வார்டு மறுவறையறை செய்த வரவு கருத்துருவிற்கான வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியிட்டார்.நிகழ்ச்சியில் சப்.கலெக்டர் பிரத்தீக் தயாள், தாசில்தார் கந்தப்பன், மண்டல துணை தாசில்தார் மாரிச்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிஷோர்குமார், சண்முகநாதன், முருகப்பா, தலைமை இடத்து துணை தாசில்தார் மணி, தேர்தல் துணை தாசில்தார் சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரபாகரன் அருண் செல்வம், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் வெங்கட்ராமன், கூடுதல் துணை தாசில்தார் பத்மாவதி, சிறப்பு நீதித்துறை நடுவர் முருகேஸ்வரி, கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் ஜெயலெட்சுமி, சர்வே துறை வட்ட துணை ஆய்வாளர் ராஜலெட்சுமி, முதுநிலை வரைவாளர் குளோரி ரூபி, சார் ஆய்வாளர் ராஜா, முருகன், அய்யப்பன், ஆறுமுகம் உள்ளிட்ட வருவாய் துறையினர், ஊராட்சி செயலர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Amba Taluk Office ,
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு