×

இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் கோயில் விழா நடத்த அமைதி பேச்சுவார்த்தை

இடைப்பாடி, பிப்.17:  இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் மாரியம்மன் கோயில் விழா நடத்துவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
கொங்கணாபுரம் ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சியில் உள்ள உப்பாரப்பட்டியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் போது சுவாமியை சிவப்பு வண்ணம் பூசிய குதிரை மீது வைத்து தான் ஊர்வலம் அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுக்கு முன் புதியதாக வெள்ளை கலரில் வர்ணம் பூசப்பட்ட குதிரையில் சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போதில் இருந்தே சிவப்பு குதிரையில் தான் ஊர்வலம் கொண்டு வரவேண்டும் என ஒரு தரப்பினரும்., வெள்ளை குதிரையில் தான் ஊர்வலம் கொண்டு செல்லவேண்டும் என மற்ெறாரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்துவதில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு மாசித்திருவிழா அடுத்த வாரம் தொடங்க உள்ளது. எந்த குதிரையில் ஊர்வலம் நடத்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம், இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கோகிலா, எஸ்ஐ சாந்தி, ஆர்ஐ சுமதி ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் இருதரப்பினர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் 4 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 2 நாட்கள் சிவப்பு குதிரையிலும், மற்ற 2 நாட்கள் வெள்ளை குதிரையிலும் சுவாமி ஊர்வலம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை 2 தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதில் ஊர்பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Peace talks ,temple ceremony ,office ,Intermediary Taluk ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...