புளியங்குடி அருகே வடமலாபுரத்தில் இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை

புளியங்குடி,பிப்.13:  புளியங்குடி அருகே வடமலாபுரத்தில் இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. புளியங்குடி அருகே உள்ள சிறிய கிராமம் வடமலாபுரம். சுமார் 1500 பேர் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். இங்கு ஹாஸ்டல் வசதியுடன் கூடிய அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த அரசு பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து தான் அனைத்து மாணவர்களும், ஊர் மக்களும் வேறு ஊர் செல்வார்கள். இந்த பேருந்து நிறுத்தம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.காங்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. கூரையில் உள்ள சிமென்ட்  பூச்சுகள் முழுவதும் விழுந்து விட்டன. பள்ளி மாணவர்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து தான் பள்ளிக்கு காலையிலும் மாலையிலும் செல்கின்றனர். பெரும் ஆபத்து வரும் முன் இந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்களும் மாணவர்களும் சம்பத்தப்பட்ட துறை

அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories:

>