×

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவு

சங்கரன்கோவில், பிப்.7:  சங்கரன்கோவில் அருகேயுள்ள சின்னஒப்பனையாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகன். தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி(25). உறவினர்களான இவர்கள்  3ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேன்மொழி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.

Tags :
× RELATED நீதிபதி வீட்டில் திடீரென மயங்கி...