×

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் பாராளுமன்றத்தில் வசந்தகுமார் எம்.பி பேச்சு

நாகர்கோவில், பிப்.7: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வசந்தகுமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வசந்தகுமார் எம்.பி பேசியதாவது: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போகின்ற மீனவர்களை 6 வருடம் கடந்த பிறகுதான் இறந்தவர் என்று அறிவிக்கின்றனர். அப்போதுதான் அதற்கான இழப்பீடு தொகையும் கிடைக்கப்பெறுகிறது. இதனை மாற்றி ஒரு வருட காலத்திலேயே காணாமல் போனவர்களை இறந்தவர்கள் என்று அறிவிக்க வேண்டும். இழப்பீடு தொகையாக ₹10 லட்சமும் அந்த குடும்பத்தினருக்கு வழங்கி உதவிட வேண்டும்.

2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் நாகர்கோவில் முதல் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ₹49 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணி முழுமையாக நடக்கவில்லை. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை, பிற அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தும், 2க்கும் மேற்பட்ட போராட்டம் நடத்தியும் அதன் விளைவாக நானும் பொதுமக்களும் கைது செய்யப்பட்டோமே தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த பராமரிக்கப்படாத சாலையால் பொதுமக்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Vasanthakumar MP ,speech ,Parliament ,highway ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...