×

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு சாத்தூர், திருவில்லிபுத்தூரில் மனித சங்கிலி போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சாத்தூர், ஜன.31:  சாத்தூர், திருவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சாத்தூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்ற மனித சங்கிலிக்கு திமுக நகர செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். இதில்  திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  

திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் திமுக சார்பில் யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம், நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வமணி, காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் வன்னிய ராஜ் மற்றும் பெரியசாமி தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட குழுவைச் சேர்ந்த திருமலை, நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாதர் சங்கத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி, மதிமுக சார்பில் முரளி மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நகர் செயலாளர் மைக்கேல் மற்றும் பள்ளி மாணவிகள், இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நேற்று மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

Tags : human chain protest ,Thiruviliputhur ,Sattur ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது