×

பள்ளி மாணவி கிண்டல் 2 மாணவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி, ஜன. 31:    கள்ளக்குறிச்சி  அடுத்த அகரக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த முனியன் மகள் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு  படித்து வருகிறார். கடந்த 27ம்தேதி பள்ளி முடிந்து அரசு  பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அதே பேருந்தில் வந்த 12ம் வகுப்பு மாணவர் ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மலையான்  மகன் சத்தியமூர்த்தி(17), 11ம் வகுப்பு மாணவர் அதே கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன்  தினேஷ்(16) ஆகியோர் மாணவியை கேலி கிண்டல்  செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து  விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாணவி கள்ளக்குறிச்சி  அரசு மகளிர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்  மகேஸ்வரி மாணவர்கள்  இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை