×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 80 பேர் கைது

அரக்கோணம், ஜன.30: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 80 பேரை போலீசார் கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், ஒரு சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, வெங்கடேசன், பாரதி, லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக அரக்கோணம் சப்-டிவிஷன் முழுவதும் உள்ள பல்வேறு பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் 44 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ராணிப்பேட்டை போலீஸ் சப்-டிவிஷனில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 36 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ranipet ,
× RELATED ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த...