×

பேரிடர் மீட்பு பணி ஒத்திகை

திருப்பூர், ஜன.23:  திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி தீயணைப்புத்துறை அலுவலர்கள் இணைந்து மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி அளித்தனர். தீயணைப்பு துறை சார்பில், பேரிடர் மீட்பு ஒத்திகை, அம்மாபாளையம், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் நேற்று நடந்தது.
தீ விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் அதனை தவிர்க்கும் முறைகள், எச்சரிக்கை மணி ஒலித்ததும், பள்ளி மைதானத்தில் மாணவர்கள் ஒன்று கூடுதல், தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுதல், நோயாளர் ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல் வரை, மாணவர்கள் பல குழுக்களாக பிரிந்து, தத்ரூபமாக ஒத்திகை பார்த்தனர். தீ அணைப்பான்களை பயன்படுத்தும் முறைகள், கட்டிட இடர்பாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றுதல் குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்