×

அரியலூரில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர், ஜன. 22: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24ம் தேதி நடக்கிறது. அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் தீவிபத்து ஏற்பட்டால் மாணவர்கள் தப்புவது எப்படி? பெரம்பலூர்,ஜன.22: பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டால் ஆசிரியர்கள், மாணவர்கள் எப்படி தப்புவது, எப்படி காப்பாற்றுவது, எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது என தீயணைப்புத் துறையினர் பெரம்பலூர் ரோவர் பள்ளியில் செயல்விளக்கம் அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பாக பல நூறு மாணவ, மாணவியர் கல்வி பயிலும் பள்ளி வளாகங்களில், சமையல் கூடம், மின்சாரம், ஆய்வகம் ஆகியவற்றிலிருந்து, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், தீ விபத்திலிருந்து ஆசிரியர்கள், மாணவ மாணவியர், அலுவலர்கள் அனைவரும் எப்படி பாதுகாப்பாக தப்பிப்பது, எப்படி மற்றவர்களை காப்பாற்றுவது, பாதிக்கப்பட்டோருக்கு எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து, பள்ளிக்கு நேரில்சென்று செயல் விளக்கங்கள் அளிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

இதன்படி பெரம்பலூர் மாவ ட்ட தீயணைப்பு மற்றும் மீட் புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர் தாமோதரன், பெரம்பலூர் நிலைய அலுவலர் சத்தியவர்த்தனன் உள்ளிட்ட தீயணைப்பு துறையை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் பெரம்பலூர் நகரின் மையத்தில் உள்ள ரோவர் சிபிஎஸ்இ பள்ளியில், இந்த செயல்மு றை விளக்கத்தை தத்ரூபமாக செய்து காட்டினர். அப்போது பள்ளி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் முதலில் பள்ளி வளாகத்தில் இருந்து சீக்கிரமாக வெளியேறுவது, புகையில் சிக்கிய மாணவர்களை சக மாணவர்கள் இணைந்து எவ்வாறு தூக்கிக் கொண் டு வெளியேறுவது, புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுபாதிக்கப்பட்ட மாணவருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது, அவர்களை அருகில் உள்ள அரசுமருத்துவம னைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்பது குறி த்து செயல் விளக்கம் செய் து காட்டினர்.

மேலும் பொதுவாக பள்ளி வளாகத்தில், சமையல் கூட ங்களில் இருந்து தீ பரவு தல், மின்கசிவு மூலம் தீ பரவுதல், வேதியியல் ஆய் வகம் மூலம் தீ பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் இது போன்ற இடங்களில் மிகவும் கவனக்குறைவாக இல்லாமல், எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும், மாணவ- மாணவியருக்கும் தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தி விட்டு வந் தனர். இதேபோல் ஒவ்வொரு பள்ளியாக சென்று செயல் விளக்கங்கள் அளிக்க உள்ளனர்.

Tags : Farmers Grievance Day Meeting ,
× RELATED தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்