×

1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வுகள் நிறைவு; ஒன்றரை மாதங்களுக்கு விடுமுறை இருக்கும் என எதிர்பார்ப்பு

பெரம்பலூர்,ஏப்.23: இன்றுடன் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிகிறது. ஒன்றரை மாதங்களுக்கு மேல் விடுமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழக அளவில் பிளஸ்-2 எனப்படும் பன்னிரண்டாம் வகுப்பிற்கு, கடந்த மார்ச் மாதம் 1ம்தேதி தொடங்கி 22ஆம்தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. பிளஸ்-1 எனப்படும் பதினோராம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. அதேபோல் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் நான்காம் தேதி வரை அரசு பொதுதேர்வுநடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி இன்று (23ம் தேதியுடன்) தேர்வுகள் முடிவடைகிறது. இருந்தும் தொடக்க நடு நிலைப்பள்ளி ஆசிரியர்க ளுக்கு மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 26 ஆம் தேதி வரை பள்ளி கள் திறக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய நிலையில் ஜூன் 4ம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளதால், அதன் பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் நாள் அறிவிக்கப்படும். இந் நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள தால் ஜூன் மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு மேல் பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப் போகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பள்ளி மாணவ மாணவியருக்கு ஒன்றரை மாதத்திற்கு மேல் விடுமுறை கிடைக்கும்.

The post 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வுகள் நிறைவு; ஒன்றரை மாதங்களுக்கு விடுமுறை இருக்கும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் துவக்கம்