×

பெரியகுளத்தில் ரூ.8.50 லட்சம் வழிப்பறி ஒய்வு பெற்ற தலைமை காவலர் உட்பட மூன்று பேர் கைது


பெரியகுளம், ஜன.21:  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி ஆர்எஸ்ஏ காலனியை சேர்ந்தவர் செல்வம்(25). இவர் பெங்களுரிலிருந்து வெள்ளைப்பூண்டு ஏற்றிக்கொண்டு அல்லிநகரத்தில் இறங்கி விட்டார். அதற்கான பணம் சுமார் எட்டரை லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு தேனி வந்தவர் வேலையை முடித்துக் கொண்டு திரும்பினார். பெரியகுளத்தை அடுத்து குப்பம்மாள் கோயில் அருகே அவர் செல்லும் போது  டி.கள்ளிபட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் கிருஷ்ணன்(70), இவரது உறவினர்  சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேல்மணி(25) ஆகியோர் செல்வம் ஓட்டிவந்த வாகனத்தை வழிமறித்து வண்டியில் கஞ்சா இருக்கிறது என்று சொல்லி எட்டரை லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தனர். இதனால் டிரைவர் செல்வம் சத்தம் போடவே அந்த வழியாக வந்தவர்கள் பணத்தை வாங்கி பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்த டி.கள்ளிபட்டி  அருண்குமார்(29) மற்றும் ஓய்வு பெற்ற தலைமை காவலர் கிருஷ்ணன், வேல்மணி ஆகிய 3 பேரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்தது தொடர்பாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,Periyakulam ,Rs ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி